சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்
அனைத்து நாயுடு நாயக்கர் நலச்சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

1 இச்சங்கம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படும் அரசுக்கு எதிராகவும் புறம்பாகவும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது
2 இச்சங்கம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் கட்சிப் பணிகளிலும் ஈடுபாடு கொள்ளாமல் தனித்து இயங்கக்கூடிய ஒரு சங்கம் ஆகும்
3 இச்சங்கத்தின் ஒற்றுமையை உறுதி செய்தல் கல்வி வேலைவாய்ப்பில் உதவி செய்தல்
4 மருத்துவம் சார்ந்த உதவிகளை தடையின்றி செய்தல் இச்சங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்தல்
5 நீட் ஜே இ இ போன்ற உயர் கல்வி சார்ந்த போட்டி தேர்வுகளுக்கு இச்சங்கத்தின் சார்பாக மாணவர்களை தயார் செய்தல்
6 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்தல்
7 சங்க உறுப்பினர்களுடன் திட்டமிடுதல் திட்டங்களை செயல்படுத்துதல் நிர்வாக மேற்பார்வை செய்தல் திட்ட பணிகளுக்கான அனைத்து வரவு செலவுகளுக்கு முறையான ரசீதுகள் வவுச்சர்கள் கணக்கு பதிவேடுகள் வங்கி கணக்குகள் பராமரித்து வருடம் தோறும் முறையாக தணிக்கை செய்து வருதல்
8 ஏழை எளியோருக்கு இலவச சட்ட உதவி அமைத்துக் கொடுத்தல் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு விபத்து மற்றும் இயற்கை மரணம் ஆகிவிட்டது நிதி உதவி வழங்குதல்
9 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தோருக்கு இச்சங்கத்தின் சார்பாக ஊக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டி கௌரவப்படுத்துதல்
10 மேற்படி சங்கம் அமைந்துள்ள இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் நல்வாழ்விற்காகவும் விழிப்புணர்வுக்காகவும் சுகாதாரம் கல்வி மற்றும் மருத்துவ முகாம் போன்றவற்றை இந்த சங்கம் தன்னிச்சையாகவோ அல்லது மற்ற பொது தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அனுமதி பெற்று உதவி செய்தல்
11 இச்சங்க உறுப்பினர்களின் வீட்டு சுப துக்க நிகழ்வுகளில் நமது சங்கம் சார்பில கலந்து கொள்ளுதல்